சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வெளியூரில் இருந்து சென்னை வந்து ஏராளமானோர் பணி செய்து வருகின்றனர்.  பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் அந்த நேரங்களில் போக்குவரத்து வசதிகள் அதிக அளவில் தேவைப்படுகிறது.  இதற்காக அரசு பல ஏற்பாடுகளைச் செய்வது வழக்கமாகும்

தற்போது தீபாவளி  பண்டிகை வருவதால் சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ளனர்.  இதைப் போல் சென்னையில் இருந்து வெளியூரில் பணி புரிவோரும் சென்னைக்கு அதிக அளவில் வர உள்ளனர். இதையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “சென்னை புறநகர்ப் பகுதியில் 6 இடங்களில் இருந்து பொதுமக்கள் தீபாவளிக்காகச் சொந்த ஊர்களுக்கு செல்ல 16000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  இதைப் போல் வெளியூர்களில் இருந்து சென்னை வர 17000 பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.