டில்லி

ன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது.

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை அறிவிக்கின்றன.  இந்த விலை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.105 அதிகரிக்கப்பட்டுள்ளது.   கடந்த மாதம் 19 கிலோ எடையுள்ள இந்த எரிவாயு சிலிண்டர், ரூ.2040 ஆக இருந்தது.  இன்று முதல் அதன் விலை ரூ.105 அதிகரித்து தற்போது ரு.2145 ஆகி உள்ளது.

வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை இம்முறை உயர்த்தப்படவில்லை.   ஏற்கனவே மாதத்துக்கு ஒரு முறை மாறும் எரிவாயு சிலிண்டர் விலையில் பல முறை மாத இடையிலும் மாற்றப்பட்டுள்ளது.  எனவே வீட்டு உபயோக எரிவாயு விலையும், உயரலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.