சென்னை

ன்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் அதிமுக நேர்காணல் நடத்த உள்ளது

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்க, விருப்ப மனு விநியோகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கியது.

இதில் பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ. 20 ஆயிரம், தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை வாங்கி சென்றனர்.

கடந்த 6 ஆம் தேதியுடன் விருப்ப மனுக்கள் விநியோகம் நிறைவடைந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சமர்ப்பிக்கும் கால அவகாசமும் அன்றைய தினமே  நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

இன்றும் நாளையும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு \, நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது. எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு நேர்காணல் தொடங்க உள்ளது..