சென்னை

ன்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பி வர 10,409 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வசிப்போர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு கடந்த வாரம் புறப்பட்டுச் சென்றனர்.  தில் சென்னையில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர்.    பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து இன்று அதாவது 17 ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று முதல் பொங்கலுக்குச் சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர உள்ளனர்.  அவர்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.  

தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இது குறித்து,

“இன்று (17ஆம் தேதி) அதிகாலை முதல் 19 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி விட்டு பணியிடங்களுக்குத் திரும்புவோருக்காக வழக்கமான பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.  தமிழகம் முழுவதும் 10,409 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்த பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் 24 மணி நேரமும் செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளன.   பெரும்பாலும் சென்னை நகர் திரும்புவோர் மின்சார ரயில்கள் மூலம் இருப்பிடம் செல்வதால் தொலை தூரங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் வழியாக இயக்கப்படும்”

எனத் தெரிவித்துள்ளனர்.