சென்னை

ஜூலை 7 முதல் தமிழகத்தில் 4ஆம் வந்தே பாரத் ரயில் சேவை சென்னை விஜயவாடா இடையே தொடங்க உள்ளது.

பெங்களூர் சென்னை இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. பிறகு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலைச் சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது முதல்முறையாகத் தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் திறக்கப்பட்டு உள்ள சேவை ஆகும். சுமார் 6 மணி நேரத்தில் இந்த ரயிலில் கோவை செல்ல முடியும்.

மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிக அளவில் சென்னை – கோவை இடையே பயணிகள் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாகப் பல இருக்கைகளுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் விஜயவாடா மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. ஜூலை 7 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் இந்த சேவை தொடங்கப்படும்.பயணிகளுக்கு  ஜூலை 8 முதல் பயணிகளுக்குச் சேவை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாகச் சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்புகிறது. . விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். இந்த வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும்.

ஏற்கனவே சென்னை – திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் வரப்போவதாகச் செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இந்த ரயில் மூலம் சென்னையில் ரேணிகுண்டாவுக்கு சுமார் 1.5 மணி நேரத்தில் செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது.