சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழை  பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று முதல் ஜூலை 8 வரை தமிழகம் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது,