டெல்லி: 2014-24 கால கட்டத்தில், டிசம்பர் 2023 நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு ரூ.2,77,444 கோடி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்துள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
”2004-14 கால கட்டத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழகத்திற்கு வரி பகிர்வு ரூ.94,977 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவே, பாஜகவின் 2014-24 காலக்கட்டத்தில், அதாவது டிசம்பர் 2023 நிலவரப்படி, இந்த கால கட்டத்தில், ரூ.2,77,444 கோடி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது 192% அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 8ந்தேதி வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், காங்கிரஸ் கூட்டணியின் பத்தாண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதாரத்தில் என்ன தவறுகள் நடந்தன, அவை எவ்வாறு மோடியின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் சரி செய்யப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு எந்தளவிற்கு வழங்கப்பட்டு உள்ளது என்பது குறித்த விவரமுஅம வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
59 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையில், கடந்த பத்தாண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எந்தளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டு உள்ளது. இநத் வெள்ளை அறிக்கையின் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்றும் சனிக்கிழமை மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் விவாதத்தின் மீது நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
004-14 வரையிலான காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், பொருளாதாரம் பலவீனமாக இருந்ததாகவும் லோக்சபாவில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது (2004-2014) ஏற்பட்ட பொருளாதார, நிர்வாக சீர்குலைவுகள் அனைத்தையும் தொகுத்து இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போதுழ, பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. வாராக்கடன்கள் காரணமாக வங்கிகளும் பலவீனமாக இருந்தன. காங்., ஆட்சி காலத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. மன்மோகன் சிங் அரசு பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியது. காமன்வெல்த் போட்டியில் பெரிய ஊழல் நடந்துள்ளது. அந்த ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவில் இருந்தன. டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மோசமாக இருந்தன. தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு சிலருக்கு மட்டுமே காங்., ஆட்சி அனுமதி அளித்துள்ளது. அந்நிய செலாவணி குறைந்த அளவில் கையிருப்பு இருந்தது. தவறான பொருளாதார நிர்வாகம், நிதி ஒழுங்கற்ற தன்மை இருந்தது என பல குற்றச்சாட்டுக்கள் அதில் கூறப்பட்டுஉள்ளது.
ஆனால், மேலும், 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபிறகு, நாங்கள் பொருளாதாரத்தை படிப்படியாக மீட்டு, சீரான வரிசையில் கொண்டு வருவதற்கான பணிகள் அளப்பரியதாக இருந்தது. பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி இருப்பதோடு வளர்ச்சி பாதையில் கொண்டு வந்துள்ளோம்,
தற்போது இந்தியாவில் , 620 பில்லியன் அளவில் அந்நிய செலவாணி இருக்கிறது. தற்போது வலுவான நிலையில் இந்திய பொருளாதரம் உள்ளது.
தற்போது உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் இந்திய பொருளாதரம் ஆகும். பொருளாதார ரீதியில் இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது. அடுத்து வேகமாக 3வது இடம் நோக்கி நகர்ந்து வருகிறது.
எதிர்கால திட்டங்களை நோக்கி தன்னம்பிக்கையுடன் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள வரி பகிர்வு உள்பட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி பகிர்வு குறித்தும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலக எக்ஸ் பதிவில் வெளியாகி இருக்கும் தகவலில்,
”2004-14 கால கட்டத்தில் தமிழகத்திற்கு வரி பகிர்வு ரூ.94,977 கோடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவே 2014-24 கால கட்டத்தில், டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.2,77,444 கோடி தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இது 192% அதிகமாகும்.
அதேபோல், 2004-14 கால கட்டத்தில், தமிழகத்திற்கு ரூ.57,924.42 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது
ஆனால், 2014-2023ல் இது ரூ.2,30,893 கோடியாக இருந்தது. இது ஒன்பது ஆண்டுகளில் 300% அதிகமாகும்.
2021-22 ஆம் நிதியாண்டில், 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக, மூலதனச் செலவினங்களுக்காக ரூ.505.50 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் ரூ. 3,263 கோடியும், 2023-24 ஆம் நிதியாண்டில், டிசம்பர் 11, 2023 நிலவரப்படி, ரூ.2643.65 கோடியும் 50 ஆண்டு கால வட்டியில்லா கடனாக மாநிலத்திற்கு மூலதனச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளது.
என தெரிவித்துள்ளார்.
இதன் முழு விவரம் காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை பதிவிறக்கம் செய்யலாம்…