சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  ஆனால், அவரை இடைநீக்கம் செய்ய துணைவேந்தர் மறுத்து வருகிறார். இது சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சைக்கு பெயர் பெற்றுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்மீது ஏற்கனவே புகார்கள் எழுந்து கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பல்கலைக்கழக பதிவாளர்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் சஸ்பெண்டு செய்ய துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழகத்தில்  பணிபுரிவோர் அனுமதி பெறாமல் புத்தகம் வெளிடவோ, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்கவோ கூடாது என  சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், ‘பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பின்பற்றவேண்டிய நடத்தை விதிகளின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறாமல் புத்தகங்கள் வெளியிடவோ, சமூக ஊடகங்களில் பேட்டி கொடுக்கவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை அனுமதி பெற்று அல்லது அனுமதி பெறாமல் வெளியிட்டுள்ள புத்தகங்கள் குறித்த அனைத்து விவரங்களையும் உள்தர உத்தரவாத மையத்தின் தேவைக்காக வரும் 20ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறும்’ அதில் குறிப்பிடப்பட்ருந்தது.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்வி, கலாசாரம், அறிவியல், பண்பாடு, வரலாறு, கலை போன்ற பிரிவுகளில் படைப்புகளை வெளியிட முன் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதால் பதிவாளரின் இந்த சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,  இது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று கருத்துகள் எழுந்துள்ளது.  இதையடுத்து அந்த சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், பதிவாளர் தங்கவேலு அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே முறைகேடு தொடர்பாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்ட நிலையில், அவருக்கு  உறுதுணையாக இருந்தவர் பதிவாளர் தங்கவேல் என்றும்,  இவர்மீதும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வைத்த தொடர் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி ஐஏஎஸ் , பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய குழு அமைத்து, காவல்துறை உதவியுடன் ஆய்வு நடத்தி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

பல்கலை.யில் தனது துறைக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக பதிவாளர் மீது குற்றச்சாட்டு முறைகேடு புகாரை அடுத்து பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து உயர்கல்வித்துறை நடவடிக்கை தேவைக்கு அதிகமாக கணினிகளை கொள்முதல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளரை சஸ்பெண்டு செய்ய மறுத்து வருகிறார். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தர்கள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், தமிழ்நாடு அரசின் உத்தவை மதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.