புதுச்சேரியில் வரும் 11ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட்: டிபிஜி சுந்தரி நந்தா

Must read

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில்  வரும் திங்கள் கிழமை (11ந்தேதி)  முதல் கட்டாய ஹெல்மேட் சடடம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று டிஜிபி  அறிவித்து உள்ளார்.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி,  கடந்த 2017ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டு வந்து அமல்படுத்தினார். அப்போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து  பல்வேறு மாநிலங்களில் கட்டாய ஹெல்மட் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியிலும்   கட்டாய ஹெல்மட்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தா நிலையில், இனிமேல்  இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்  டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டு உள்ளார்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வரும் 11ந்தேதி முதல் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறி உள்ளார்.

More articles

Latest article