சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ப சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியாக 20 இடங்களில் வென்ற ஆம்ஆத்மி இடம்பெற்றது. அகாலிதளம் 15 இடங்களையும் பா4க 3 இடங்களையும்,  லோக் இன்சாப் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றின.

தற்போது பிப்ரவரி மாதம் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,  அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியானது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து நிலையில், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது.  இன்று பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்,

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்,  பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும், வளம் பெறுவதற்கும் 10 அம்ச ‘பஞ்சாப் மாதிரி’ திட்டத்தை உருவாக்கியுள்ளோம் என்றவர்,

வேலை வாய்ப்பிற்காக கனடா போன்ற நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு திரும்பும் அளவிற்கான வளமான பஞ்சாபை உருவாக்குவோம்.

பஞ்சாபிலிருந்து போதைப்பொருள் கும்பலை ஒழிக்கப்படும்,

அனைத்து கொலை வழக்குகளிலும் நீதியை உறுதி செய்வோம்,

ஊழலை ஒழிப்போம்.

நாங்கள் 16,000 மருத்துவமனைகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் இலவச சிகிச்சை அளிப்போம்.

அனைத்து நாள்களிலும் 24 மணிநேரமும்  இலவச மின்சாரம் வழங்குவோம்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்குவோம்  உள்பட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.