வாரணாசி

ரும் 22 ஆம் தேதி அன்று ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாரணாசியில் இலவச படகு சவாரி நடைபெற உள்ளது.

வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. வரும் 15 ஆம் தேதிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து ஜனவரி 16 ஆம் தேதி சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, 22ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்நிலையில் வாரணாசியில் உள்ள மா கங்கா நிஷாத் ராஜ் சேவை அறக்கட்டளை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது,

அதில்,

“பகவான் ஸ்ரீ ராமருடன் படகு ஓட்டுபவர்களை உள்ளடக்கிய நிஷாத் சமூகம், ஒருபிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது. பகவான் ஸ்ரீ ராமர் வனவாசம் சென்றபோது நிஷாத் ராஜ், அவர்களுக்கு படகோட்டியதுடன் பல உதவிகள் செய்து உள்ளார். 

எனவே அந்த பாரம்பரியத்தை முன்னெடுக்கும் வகையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22 ஆம் தேதி, இலவச படகு சேவை வழங்க தீர்மானித்து உள்ளோம். அன்று வாரணாசியில் கங்கையின் 82 படகு நிறுத்தங்களுக்கும் இலவச பயணம் செய்யலாம்” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.