சென்னை:
ரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்கிறார். முதல்-அமைச்சர் திட்டத்தை துவக்கி வைத்தவுடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.