சென்னை:  
பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார்.
foxconn2-600
ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும்  பாக்ஸ்கான் தொழிற்சாலை இம்மாத இறுதியில் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
அமைச்சர் சம்பத் கூறுகையில், தமிழக அரசு அதிகாரிகள் குழு சமீபத்தில் தைவான் சென்று பாக்ஸ்கான் நிறுவன உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளதால் மீண்டும் ஆலை திறக்கப்பட உள்ளது. இம்மாதம் இறுதிக்குள் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் திறக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொழிற்சாலை இருந்த பகுதியில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்படும் என்றார்.
ஏற்கனவே செயல்பட்டு வந்த இந்த தொழிற்சாலையில் நிரந்தரமாகவும், ஒப்பந்த முறையிலும், பயிற்சி தொழிலாளர்களாகவும் 8000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இதில் முதலிலேயே, 6400 பணியாளர்கள் வேலையை இழந்த நிலையில் எஞ்சியிருந்த சுமார் 1500 தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகையை நிறுவனம் வழங்கியது.