அரக்கோணம்:
சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய  மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
school
தமிழ்நாட்டில்  மதுவினால்   மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி வருகிறது.
அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை,  பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி, வகுப்பறைக்கு போதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம் அடுத்த ஓச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 342 மாணவர்கள் படிக்கின்றனர்.  சம்பவத்தன்று ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது தேவையில்லாமல் சில மாணவர்கள் உளறிகொண்டு இருந்தனர். இதனால் சந்தேகமடைந்த ஆசிரியை, மாணவர்கள் அருகில் சென்றபோது, அவர்கள் மது குடித்திருப்பது தெரியவந்தது. மது மயக்கத்தில் பினாத்திக்கொண்டு, நேர்மாறான கேள்விகளை கேட்டு ஆசிரியரை கலாய்த்துகொண்டிருந்தனர்.
இதுபற்றி வகுப்பு ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் கூறியதையடுத்து, மாணவர்கள் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆசிரியர் மாணவர்களிடம் விசாரித்ததில், 12 மாணவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 பேரையும்  பள்ளியில்  இருந்து வெளியேற்றினார்.
விசாரணையில் அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாள் என தெரிய வந்ததது. அந்த மாணவன் சக மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில்  உள்ள பாழடைந்த கட்டித்திற்கு வைத்து பார்ட்டி கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு உள்ளது. ஆனால் பள்ளி மாணவர்களுக்கு மது எப்படி கிடைத்தது என்பது தெரியவில்லை.