மீண்டும்…  தமிழக மீனவர் நான்கு பேர் கைது!

ராமேஸ்வரம்:

டுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக மீனவர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நெடுந்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தும், அவர்களின் ஒரு படகையும் மூழ்கடித்தும் அட்டூழியம் செய்தது.

இந்நிலையில், நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது  ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


English Summary
FourTamil Nadu fishermen arrested by Srilankan navy