சத்தீஸ்கர்: போலீசார்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

Must read

ராஜ்பூர்,

த்தீஸ்கரில் மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 போலீசார் உயிரிழந்தனர்.

 

சத்தீஸ்கர் மாநிலம்,  நாராயண்பூர் மாவட்டம் இர்பனார் கிராமப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு உள்ளதாக தகவல் வந்ததையொட்டி,  அந்த பகுதியில் உள்ள  அபூஜ்மேட் என  வனப் பகுதியில், காவல்துறை யினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக, காடுகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் போலீசார் மீது  அதிரடி தாக்குத லில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்,  இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள்  உட்பட 4 போலீசார் பலியாகினர். மேலும் 7 போலீசார் காயமடைந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாவோயிஸ்டுகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

காயமடைந்த போலீசாலை மாநில முதல்வர் ராமன்சிங் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.

More articles

Latest article