நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருண்ணன் போலீஸ் ஸ்டேஷனில் தரையில் படுத்து தூங்கிய அவலம் நடைபெற் றுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் நிமிதாவை ஆதரித்து கட்சி நிர்வாகி பாஸ்கர் பிரசாரம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம், அவரது மகன்கள் சேவியர்ராஜா, தினகர்  ஆகியோர்7 பாஸ்கரை தாக்கி உள்ளனர். இதனால் காயமடைந்த . பாஸ்கர், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையினர் புகார் பதிய மறுப்பதாக கூறப்படுகிறத. இதையடுத்து, அங்கு சென்ற முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன், மருத்துவமனைக்கு சென்று பாஸ்கரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.  தொடர்ந்து, திமுக எம்.பி.  ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, இரவு 10:00 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷன் பாரதியார் சிலைமுன்பு பாஜகவினருடன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இதன்பிறகே திமுக எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது  மகன்கள் சேவியர்ராஜா, தினகர் உள்ளிட்ட 30 பேர் மீது பணகுடி போலீசார் சாதாரண நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர். ஆனால், 307 பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி பொன்.ராதா கிருஷ்ணன் போராட்டத்தை தொடர்ந்தார். இரவு 11:00 மணிக்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார் வந்து பேச்சு நடத்தினார்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு வழக்கு பதிவு செய்ததாக கூறி, பொன். ராதாகிருஷ்ணன் உட்பட நான்கு பேரை ஜங்ஷன் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அங்கு,  அவர்களை  சொந்த ஜாமினில் விடுவிப்பதாக கூறினார். ஆனால், இரவு நெடுநேரம் ஆனதால், எங்கும் செல்ல முடியாத நிலையில்,  பொன்.ராதாகிருஷ்ணன்,  அங்கிருந்த நபரிம் ஒரு போர்வையை வாங்கி, ஸ்டேஷனிலேயே, தரையில் படுத்து துாங்கினார்.
பொன்னாரின் நடவடிக்கை பரபரப்பை  ஏற்படுத்தியது. மேலும், ன்னாள் மத்திய அமைச்சரான அவர்  தரையில் படுத்து உறங்கியதும் சலசலப்பை உண்டாக்கியது. மு பின்னர் காலை விடிந்ததும், அவரும், அவருடன் வந்தவர்களும் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.
இந்த நிலையில், தற்போது,  திமுக எம்.பி., ஞானதிரவியத்தின் வீட்டு தோட்டக்காரர் நாகராஜன் கொடுத்த புகாரின்பேரில்,  பா.ஜ., பிரமுகர் பாஸ்கர், வேட்பாளர் நமிதாவின் கணவர் உட்பட ஐந்து பேர் மீது தீண்டாமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.