சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார்.

கடந்த 4-2-2024 பிற்பகல் 1:30 மணியளவில் கஷங் நாலா பகுதியில் உள்ள சட்லஜ் நதிக்கரையின் அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி உள்பட 3 பேர் காரில் பயணம் செய்தனர்.

அப்போது இவர்களுடைய கார் விபத்துக்குள்ளாகி சட்லஜ் நதியில் விழுந்தது. ஆற்றில் விழுந்த காரில் இருந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த காரில் பயணம் செய்த வெற்றியின் நண்பர் திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால் இவர்களுடன் காரில் பயணம் செய்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை மட்டும் மாயமானார். இதனைத் தொடர்ந்து இவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் இவரது உடல் சட்லெஜ் நதியில் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் சடலமாக இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சட்லெஜ் நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகம் சைதை துரைசாமியின் மகனுடையதா ? போலீசார் தீவிர விசாரணை