சிறையில் இருந்து ஆட்சி செய்யும் காட்பாதர்!: சசிகலாவை கிண்டல் செய்யும் கட்ஜூ?

Must read

 

குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது  அமெரிக்காவில் வழக்கம். அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று மறைமுகமாக சசிகலாவை கிண்டல் செய்திருக்கிறார்  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ.

கட்ஜூ

பொது விவகாரங்கள் குறித்து உடனுக்குடன் தனது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ.

ஜெயலலிதா மரணம், சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, பிறகு முதல்வர் பதவிக்கு முயன்றது, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை, எடப்பாடி முதல்வரானது.. இப்படி தமிழக விவகாரங்களையும் அவர் விட்டுவைப்பதில்லை.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றம் செய்துவிட்டு சிறைவாசம் அனுபவிக்கும் காட்பாதர்கள், அங்கிருந்தபடியே தங்களது திட்டங்களை செயல்படுத்துவது  அமெரிக்காவில் நடக்கிறது. அது போல தற்போது இந்தியாவிலும் நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

எவர் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், இது சசிகலாவையே குறிக்கிறது என்று யூகித்து, அதற்கேற்ற பின்னூட்டங்களை அப் பதிவில் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

 

More articles

Latest article