சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் 45 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நலிவடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் யோசித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின்  பொருளாதார நிலைமையை மேம்படுத்துவது தொடர்பான  முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரடங்கு காலத்தால் பின்னடைவை சந்தித்திருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சி. ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு, தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.
ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும், நிலைமையை சீராக்க தற்போதிருக்கும் வாய்ப்புகள் குறித்தும் இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
மாநிலத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை இந்த குழு  தனது அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும், தேவைப்பட்டால், இடைக்கால அறிக்கையும் கூட சமர்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.