பஞ்சாப் முன்னாள் முதல்வர் சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்

Must read

லக்னோ:

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் சுர்ஜித் சிங் பர்னாலா இன்று காலமானார்.

அவருக்கு வயது 91. ஹரியானா மாநிலம் அடேல்லியின் பிறந்தவர். இவர் தமிழ்நாடு, உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் கவர்னராக பதவி வகித்தனர். மேலும் இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவு பதவி வகித்துள்ளார். இவரது மனைவி சுர்ஜித் கவுர் பர்னாலா. ககன்ஜின் சிங் பர்னாலா என்ற மகன் உள்ளார். லக்னோ பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

1969ல் குர்னம் சிங் ஆட்சியில் முதன்முறையாக அமைச்சரானார். 1977ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மொரார்ஜி தேசாய் அரசில் வேளாண் துறை அமைச்சரானார். மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோது இவர் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். ஆனால் இது நடக்கவில்லை.
1985ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி முதல் 1987ம் ஆண்டு மே 11ம் தேதி வரை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். 1990ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை 9 மாதங்கள் தமிழ்நாடு கவர்னராக இருந்தார். அப்போதைய தமிழக அரசை கலைக்க இவர் பரிந்துரைக்க  மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் பீகார் கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். மீண்டும் 1996ம் ஆண்டு இவர் பிரதமராக கூடிய வாய்ப்பு கைகூடி வந்து நழுவிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article