டில்லி:

முன்னாள் பிரதமர் ‘லால்பகதூர் சாஸ்திரி’யின் 115வது  பிறந்த நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி மலர்தூவி மரியாதை செய்தனர்.

அதுபோல லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில்சாஸ்திரியும் தனது குடும்பத்தினருடன் வந்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 2வது பிரதமர் என்ற பெருமைக்குரியவர் லால்பகதூர் சாஸ்திரி.