நிதிஆயோக் கூட்டம்: காங்கிரஸ் முதல்வர்களுடன் மன்மோகன் சிங் ஆலோசனை!

Must read

டில்லி:

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி வந்துள்ள காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை

இந்த ஆலோசனை கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடக முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டனர். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் மட்டும் கலந்துகொள்ளவில்லை.

காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனையின்போது, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள், மேலும் அமல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்கான நிதி மதிப்பீடுகள் குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேசும்படி ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து காலை 11.30 மணி அளவில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மோடியை சந்தித்து பேசினார். அப்போது மாநில திட்டங்கள் குறித்து பேசியதாக கூறப்பட்டது. அதுபோல, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிதி அமைச்ச்ர நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார்.

More articles

Latest article