காந்திநகர்:

குஜராத்தில் ஓட்டல் டிரெய்னேஜ் கிளினிங்போது விஷவாயு தாக்கி 7 பேர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. இதில் 4 பேர் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் என்றும் மேலும் 3 பேர் ஒட்டல் ஊழியர்கள் என்றும் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா அருகே தபோகோய்  என்ற பகுதியில் செயல்பட்டு வந்த ஓட்டல் ஒன்றில் டிரெனேஜ் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கழிவுநீர் தொட்டியை  கிளின் செய்ய,  துப்புரவு தொழிலாளர்கள் முயன்றனர்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக டிரெய்னேஜ் தொட்டியில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரியானார்கள். அப்போது, அவர்களை மீட்க முயன்ற ஓட்டல் ஊழியர்கள் 3 பேரும் விஷவாயு தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் விஷவாயு தாக்கியதில் 7 பேரும்  பரிதாபமாக  உயிரிழந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து அந்த ஓட்டல் மானேஜர் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர்களி உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.