கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்  மற்றும் அருள் கந்தா ஆகியோர் ‘1எம்­டிபி’ எனப்­படும் மலே­சிய மேம்­பாட்­டுக் கழ­கம் குறித்த வழக்கு ஒன்­றி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். mஅவருடன்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப்ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஊழல் குற்றச்சாட்டுதொடர்பாக,  நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் அருள்கந்தா உள்பட பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் 1எம்.டி.பி. ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே 1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை மாற்றியமைக்க நஜீப் ரசாக், பிரதமர் மற்றும் நிதிமந்திரியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நஜீப் ரசாக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதரங்கள் இல்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

மேலும் நஜீப்புக்கு உடந்தையாக இருந்ததாக கூட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்­கில் தீர்ப்­ப­ளித்த நீதி­பதி முக­மது ஸைனி மஸ்­லான், 2016ல் தலை­மைத் தணிக்கை அதி­கா­ரி­யாக இருந்த அம்ப்­ரின் புவாங்­கின் சாட்­சி­யம் குறித்து எடுத்­து­ரைத்­தார். வ­ழக்­கில் அர­சாங்­கத் தரப்பு ஆறா­வது சாட்­சி­ய­மாக அவ­ரைச் சேர்த்­தி­ருந்­தது. “தலை­மைத் தணிக்கை அதிகாரி அவ­ரது கட­மையை ஆற்ற, அர­ச­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் வலு­வான அதி­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. யாருக்­கும் அஞ்­சியோ சாத­க­மா­கவோ செயல்­பட வேண்­டிய அவ­சி­யம் அவ­ருக்கு இல்லை,” என்று நீதி­பதி ஸைனி குறிப்­பிட்­டார்.

திரு அம்ப்­ரின் தமது கொள்­கை­யில் தீவி­ர­மா­ன­வர். நேர்­மை­யா­கச் செயல்­ப­டக்­கூ­டி­ய­வர் என்­பதை நீதி­பதி சுட்­டி­னார். அவர் சாட்­சி­யம் அளிக்­கை­யில் எந்த இடத்­தி­லும் தடு­மா­ற­வில்லை என்­றார் நீதி­பதி.

‘1எம்­டிபி’யின் முன்­னாள் தலைமை நிர்­வாக அதி­காரி அருள் கந்தா கந்­த­சாமி அளித்த கூடு­தல் விவ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் 2016ஆம் ஆண்­டின் அறிக்­கை­யில் திரு அம்ப்­ரின் திருத்­தங்­கள் செய்­த­தாக நீதி­பதி சொன்­னார்.  ‘1எம்­டிபி’ நிர்­வா­கம் சரி­யாக ஒத்­து­ழைத்­தி­ருந்­தால் திரு அருள் கந்தா கூடு­தல் தக­வல்­க­ளைப் பின்­னர் வழங்க நேரிட்­டி­ருக்­காது என்­றார் அவர்.

தம்­மேல் குற்­ற­வி­யல் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தைத் தவிர்க்­கும் நோக்­கில் திரு நஜிப்­தான் தணிக்கை அறிக்­கை­யில் திருத்­தம் செய்­யும்­படி உத்­த­ர­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­வதை நீதி­பதி நிரா­க­ரித்­தார். “அதன் தொடர்­பில் எந்த ஆதா­ர­மும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. அறிக்­கை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட தக­வல்­கள் திரு நஜிப் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்­துக்­கொள்ள எவ்­வாறு உத­வின என்று அர­சாங்­கத் தரப்பு நிரூ­பிக்­க­வில்லை,” என்று நீதி­பதி ஸைனி கூறி­னார்.

திரு நஜிப்­பிற்கு உடந்­தை­யாக இருந்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்ட திரு அருள் கந்­தா­வும் இவ்­வ­ழக்­கில் இருந்து விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். திரு அருள் கந்தா விசா­ர­ணை­யில் உண்­மை­யான தக­வல்­களைக் கூறி­னார் என்று உறு­தி­யா­கக் கூறிய நீதி­பதி, அவ­ரது சாட்­சி­யம் திரு நஜிப்­பிற்கு சாத­க­மாக அமைந்­த­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

அவர் முழு­வ­தும் உண்­மை­யைக் கூற­வில்லை என்ற அர­சாங்­கத் தரப்­பின் வாதத்தை நீதி­பதி நிரா­க­ரித்­தார். அருள் கந்தாமீது இது தொடர்­பான குற்­றச்­சாட்டு மீண்­டும் சுமத்­தப்­பட மாட்­டாது என்­ப­தற்­கான உத்­த­ர­வா­த­மாக இது பார்க்­கப்­ப­டு­கிறது.