ஸ்மிருதி இரானிக்கு வளையல் வாங்கப் பணம் அனுப்பிய ‘விளையாட்டு’ வீரர்!

Must read

Former international athlete sends Rs 1,000 cheque to Smriti Irani to buy bangles for PM Modi

 

பிரதமர் மோடிக்கு வளையல் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு முன்னாள் விளையாட்டு வீரர் ஒருவர் பணம் அனுப்பி உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ஏன்.. அந்த வீரருக்கு அப்படி என்ன கோபம் என்கிறீர்களா?

 

எல்லாம் மோடி விளையாட்டுதான் காரணம். தமது ட்விட்டரில் அவ்வப்போது எல்லா நிகழ்வுகள் குறித்தும் பதிவிடும் மோடி, பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கன்னா மறைவுக்கும் அஞ்சலி செலுத்தினார். அதில் ஒன்றும் பிர்சனை இல்லை. ஆனால், அதற்கு சில நாட்கள் முன்னதாக சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 25 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமரம் மோடி தமது ட்விட்டர் தளத்தில் பதிவிடவில்லை.

 

இதைப் பார்த்து கொந்தளித்துப் போன முன்னாள் முன்னாள் விளையாட்டு வீரர் அஜீத் வர்மா என்பவர், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஆயிரம் ரூபாய்க்குரிய காசோலையை அனுப்பி, அதை வைத்து பிரதமர் மோடிக்கு வளையல் வாங்கிக் கொடுக்கும் படி ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பி உள்ளார். அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு இதேபோல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட போது, அப்போதைய பிரமதர் மன்மோகன்சிங்கிற்கு வளையல் வாங்கி அனுப்ப விரும்புவதாக தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி பேசியதை நினைவு படுத்தி உள்ளார். ‘தற்போது நிலைமை அதைவிட மோசமாகி விட்டதால், பிரதமர் மோடிக்கு நீங்களே வளையலை வாங்கிக் கொடுத்துவிடுங்கள்’ என்றும் ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர் அஜித் வர்மா ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

More articles

Latest article