இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி இன்று காலமானார், அவருக்கு வயது 77.
1967 – முதல் 1979 வரை இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக தனது அசாத்திய சுழற்பந்து வீசும் திறனை வெளிப்படுத்தியவர் பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

இடதுகை சுழற்பந்து வீச்சாளராக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளை வீழ்த்திய இவரது சராசரி 28.71.
1976 ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் அணியின் மேலாளராக திறம்பட செயல்பட்டார்.
1970 ம் ஆண்டு இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
Patrikai.com official YouTube Channel