வேலூர்:

கஸ்டு 5ந்தேதி நடைபெற உள்ள வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளராக முரளிக்குமார் நியமனம். செய்யப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு, ஆகஸ்டு 5ந்தேதி, நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதையடுத்து வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தல் காரணமாக அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தேர்தலை கண்காணிக்க 18 பறக்கும் படைகள், நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம்  தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளராக ஓய்வு பெற்ற சென்னை வருமான வரி இயக்குனராக பணியாற்றிவர் முரளிக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில், திமுக பொருளாளர் துரைமுரு கனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம் களத்தில் உள்ளனர்.