காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்கிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி

Must read

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா ஃபாஸல், ‘ஜம்மு & காஷ்மீர் மக்கள் இயக்கம்’ என்ற பெயரிலான ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வான இவர், காஷ்மீரில் நடந்துவரும் கொலைகள் மற்றும் இந்திய முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுதல் ஆகியவற்றை கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், நாட்டின் உயரிய அமைப்புகளான ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி ஆகியவை மத்திய அரசால் பாதிக்கப்படுவதையும் இவர் கண்டனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் அரசியல் வழிமுறைகள் தன்னைக் கவருவதாக கூறியுள்ளார். காஷ்மீரில் இவர் நடத்திய அரசியல் பேரணியில், நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article