சென்னை: திமுக முன்னாள் எம்பி மஸ்தான்  காரில் வைத்து அவரது உறவினர்களே கொலை செய்த வழக்கில், அவரது தம்பி மகள் ஷாகினா கைது செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்தவர் டாக்டர்.மஸ்தான் திமுகவைச் சேர்ந்த இவர் முன்னாள்  எம்பி..  மேலும்  இவர் திமுகவில் சிறுபான்மை இன நல பிரிவு மாநில செயலாளராகவும் தமிழக சிறுபான்மைதுறை வரியா துணை தலைவராகவும் இருந்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி இரவு சென்னையிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மாரடைப்பில் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது உடலில் ஏற்பட்டிருந்த சிறு காயங்களை கண்ட அவரது மகன் ஹரிஷ் ஷாநவாஸ் தனது தந்தை உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக  போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவருடன் காரில் சென்றவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.  விசாரணையில் காரில் செல்லும் போது மஸ்தானின் முகத்தில் பிளாஸ்டிக் பையை வைத்துமூடி, மூக்கை அழுத்தி கொலைசெய்தது அம்பலமானது.

இந்த வழக்கில் ஏற்கனவே மஸ்தான் தம்பி மற்றும் அவரது மகன் உள்பட  6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போத மஸ்தானின் தம்பி மகள் ஹரிதா ஷாஹினா  கைது செய்யப்பட்டு உள்ளார். மஸ்தான் கொலையில் தந்தைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.