சென்னை:
மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்.

மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் , இன்று அமித்ஷாவை சந்திக்கிறார்.ழகிரி ஆதரவாளரான கே.பி ராமலிங்கம் திமுகவில் விவசாய அணி செயலாளராக இருந்தவர். அதிமுகவில் இரண்டுமுறை எம்.எல்.ஏவாகவும் இருந்தவர், திமுகவில் இணைந்து ஒருமுறை மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்தவர்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்திய போது, அவரது நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை வெளியிட உடனடியாக பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். அதன்பிறகு, கே.பி ராமலிங்கம் மு.க ஸ்டாலினை தொடர்ச்சியாக விமர்சித்தே வந்தார். இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கட்சி நிர்வாகிகளுடனும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்த வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி ராமலிங்கம் சந்திக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.