டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்!

Must read

டில்லி:

டில்லி மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் காலமானார். அவருக்கு வயது 81.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித், கடந்த  1998ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டில்லியின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.

கடந்த  2013ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தன் சொந்தத் தொகுதியில் தோல்வியுற்றார். தொடர்ந்து பெரும்பான்மை இடங்களைப் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அதைத்தொடர்ந்து, மார்ச் 2014 முதல் ஆகஸ்டு  2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். தற்போது இவர் டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக உள்ளார்.

இவருக்கு இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது

More articles

Latest article