
சென்னை: தமிழக முன்னாள் தலைமை செயலாளரும் தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருப்பவருமான கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ)-த்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
Patrikai.com official YouTube Channel