தற்கொலைக்காக மாடியில் இருந்து குதித்தவர் மூதாட்டி மீது விழுந்தார்: தற்கொலையாளர் தப்பித்தார்.. மூதாட்டி பலி!

Must read

சென்னை:
நான்காவது மாடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்,  கீழே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மீது விழுந்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார்.  ஆனால்  மூதாட்டி பலியானார்.
சென்னை குமரன்நகர் நல்லாகுப்பம் ஏ பிளாக் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். ஆட்டோ ஓட்டுனர்.
oo
குடிப்பழக்கத்துக்கு அடிமையான செல்வம்,  சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் தராமல் குடித்தார். இதனால் அடிக்கடி அவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்படும்.  நேற்று இரவும் அதே போல் தகராறு ஏற்பட்டது.   இதனால் விரக்தி அடைந்த செல்வம், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.  அடுக்ககத்தின் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
குதித்தவர்,  தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த சாரதா என்ற 75 வயது மூதாட்டி மீது விழுந்தார்.
இதில் இருவருக்குமே காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலை மூதாட்டி சாரதா பரிதபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்ற செல்வம், காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த பாட்டி இறந்துதான் உண்மையான ஆக்சிடென்ட்… எதிர்பாராத மரணம்!
 
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article