சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார்.

தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர்  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  முதலாவதாக முதல்வர்  மு.க ஸ்டாலின் முதலில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்கும்போது ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுக் கூறி எம்.எல்.ஏவாக மு.க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில், முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவரை தொடர்ந்து, தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும் , போடிநாயணக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் பதவியேற்று கொண்டார். தொடர்ந்து, எம்எல்ஏகள் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அனைவருக்கும், தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.

அதிமுக சார்பில் சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கடிதம் சட்டப்பேரவை செயலரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எந்த அஸ்தஸ்தை முன்னாள் முதல்வர்  பழனிச்சாமி பெறுகிறார்.