சென்னை: தமிழகத்தின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டுள்ளார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர்.

அனைவருக்கும், தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார்.

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக,  கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வருகை. பேரவையின் தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டிக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர்(சபாநாயகர்) மற்றும் துணைத் தலைவர்(துணை சபாநாயகர்) தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பிறகு சரியாக காலை 10 மணி அளவில் சபை கூடியது. அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இன்று(மே.11) பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையெனில், அப்பாவு மற்றும் பிச்சாண்டி ஆகியோர் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டதாக, சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பார். அதனைத் தொடர்ந்து நாளை(மே.12) காலை சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவியேற்பார்.