2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா.

ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த காலித் பயெண்டா தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார்.

காலித் பயெண்டா

ஆப்கன் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் 45,000 கோடி ரூபாய் அளவுக்கான பட்ஜெட்டை கையாண்ட காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் தினமும் 150 டாலர் வருமானத்திற்காக உபர் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிகிறார்.

காலித் பயெண்டா

ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் உள்ள வால்ஷ் ஸ்கூல் ஆஃப் ஃபாரின் சர்வீஸில் பகுதி நேர துணை பேராசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது குடும்ப செலவுக்காக கால் டாக்சி ஓட்டிவருகிறார்.

ஆப்கான் மக்களின் இன்றைய துயரமான நிலைக்கு அமெரிக்கா தான் காரணம் என்று காலித் பயெண்டா குறை கூறுகிறார்.

சையத் அஹ்மத் சதத்

ஏற்கனவே இவரது அமைச்சரவை சகாவான சையத் அஹ்மத் சதத்தும் ஜெர்மனியில் பிஸ்சா டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.