கோவை: கோவை மாட்டத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலத்தில், சுற்றுலா பயணிகளிடம்  போலி டிக்கெட் மூலம் ரூ.60 லட்சம் மோசடி செய்த   வனத்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவரர்மீது வழக்கு பதிவு செய்து, ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு போலிய நுழைவு கட்டண  ரசீது மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆய்வு செய்த அதிகாரிகள், முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டறிந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பெரியவர்களுக்கு, ரூ.60, குழந்தைகளுக்கு ரூ.30, இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.20, கார்களுக்கு ரூ.50 வரையிலும் கட்டணமாக வனத்துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது.  நுழைவு சீட்டுகள் வழங்குமிடத்தில் இரண்டு மிஷின்களில், டிக்கெட் சீட்டை அச்சிட்டு பணத்தை பெற்றுள்ளனர். இதில், ஒரு மிஷினில் மட்டுமே முறையாக அரசாங்கத்திற்கு செல்லும் வகையில் பதிவு செய்யப்படுகிறது. மற்றொரு மிஷின் மூலம் போலியான டிக்கெட் வழங்கி அந்த பணத்தை இவர்கள் கையாடல் செய்துள்ளனர்

இந்த முறைகேட்டில், அங்கு பணியாற்றி வரும் வனத்துறை அதிகாரிகளே ஈடுபட்டதும்,  சுமார் 60 லட்சம் ரூபாய் வரை வனத்துறை அதிகாரிகளே  போலி டிக்கெட் மூலம் மோசடி செய்த சம்பவங்களும் தெரிய வந்துள்ளது. ‘ இதையடுத்து, அங்கு பணியாற்றிய அதிகாரிகள் இடைநீக்கம் செயப்பட்டுள்ளனர். இதில் முக்கிய தலையாக செயல்பட்ட ‘வனவர் ராஜேஷிடமிருந்து 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும்,.  முன்னாளர் வனச்சகர் சரவணனிடம் 25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2021, நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது,’ என்றார்