இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனை அடுத்து மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகவும் ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அந்நாடுகளில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர்.