டில்லி:

2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்….

“இந்தியா இப்போது ஆறாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. கடந்த  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11 வது இடத்தில் இருந்தது” . தற்போது கொள்கை முடக்கம், லைசென்ஸ் ராஜ் போன்ற நாட்கள் காணாமல் போய்விட்டது.

தற்போதைய வாடகை சட்டம் பழமையானது. நவீன குத்தகை சட்டம் இறுதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும்.

விமானத்துறையில்  தனியார் மயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.

கடந்த 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, உதய் திட்டம் கொண்டு வரப்பட்டது. நிதி மற்றும் செயல்பாட்டு மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு வரப்பட்ட  இந்தத் திட்டத்தின் செயல்திறனை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அது மேலும் மேம்படும்.

காப்பீட்டு  துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது

உலகளாவிய தடைகளை மீறி இந்தியாவுக்கு அந்நிய நேரடி முதலீடு மிகவும் வலுவாக உள்ளது. 2018-19ல் இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு 54.37 பில்லியன் அமெரிக்க டாலராக வலுவாக இருந்தது,

இது முந்தைய ஆண்டை விட 6% வளர்ச்சியைக் குறிக்கிறது ”: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தொடரும்….