டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வுபெறுவதை முன்னிட்டு, உச்சநீதிமன்ற விசாரணை இன்று முதன்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை இன்று காலை 10.30 மணி முதல் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படும் வழக்கு விசாரணையை பொது மக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமைநீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தலைமை நீதிபதி ரமணா ஆகஸ்ட் 26 (இன்று ஓய்வு பெறுகிறார்.) உச்ச நீதிமன்றத்தில் அவர் பதவி வகித்த காலத்தில், அவர் 657 பெஞ்ச்களில் ஒரு பகுதியாக இருந்து 174 தீர்ப்புகளை எழுதியுள்ளார். பில்கிஸ் பானோ வழக்கு மற்றும் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் உட்பட பல முக்கிய விஷயங்களை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது. இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது பஞ்சாபில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான மற்றொரு மனுவையும் விசாரித்தார்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!