டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள  என்.வி.ரமணா ஆகஸ்டு 26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை கொலிஜியம் தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி யது. அதன்படி, தற்போது மூத்த நீதிபதியாக உள்ள யு.யு.லலித்  உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் முர்மு பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமை நீதிபதியாக யுயு லலித்  ஆகஸ்ட் 27-ம் தேதி பதவியேற்க இருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். யுயு லலித்தின் பதவிக்காலம் மூன்று மாதத்திற்கு குறைவாகவே உள்ளது. வரும் நவம்பர் 8ஆம் தேதி யுயு லலித் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து மீண்டும் புதிய தலைமை நீதிபதி தேர்வு செய்யப்பட்டு  நியமிக்கப்படுவார்.