நூபுர் சர்மா மீதான வழக்குகள் டெல்லிக்கு மாற்றம்! உச்ச நீதிமன்றம் உத்தரவு

Must read

சென்னை: நூபுர் சர்மாவுக்கு எதிரான வழக்குகள் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரணைக்காக டெல்லிக்கு  மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம்,  நூபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் மூலோபாய செயல்பாடுகள் (IFSO) மூலம் எஃப்ஐஆர்கள் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டு உள்ளது.

More articles

Latest article