சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக பேரவையின் கேள்வி- பதில் நேரம் இன்று நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் என்ன நடைபெறுகிறது என்பதை பொதுமக்கள் அறியும் வகையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதுபோல, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்று பல ஆண்டு களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதை நிறைவேற்றும் வகையில், ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு நடப்பு புத்தாண்டு கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

நேற்று 2022ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று தொடங்கியது. அதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்று நடைபெறுகிறது. அதையடுத்து நாளை முதலவர் ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார்.

இந்த நிலையில், நேற்றைய கூட்டத்தொடரில் ஆளுநரின் உரிமை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது வழக்கமான செய்யப்படுவதுதான். இருந்தாலும், இன்று தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக, கேள்வி- பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளும், அதற்கு அமைச்சர் பெருமக்கள் அளிக்கும் பதில்களும் பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது.

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியவுடன் முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் முப்படைத் தளபதி பிபின் ராவத் உட்பட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.