வெளிநாடு செல்பவர்கள் கவனத்திற்கு: போலி ஏஜன்சிகளை கண்டுபிடிப்பது எப்படி?

Must read

மது இளைஞர்களிடையே வெளிநாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிந்தால் கைநிறைய சம்பளம் வாங்கலாம் என்ற ஆசை காரணமாக வெளி நாடுகளுக்குச் செல்ல ஆசைப்பட்டு, போலி ஏஜன்சிகளிடம் சிக்கி லட்சக்கணக்கான பணத்தை இழந்து,  ஏமாறுபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

அதுபோல, போலி விசாக்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று, அவதிப்படுபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புபவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து சம்பாத்யம் பண்ண விரும்புகின்றவர்கள்… அரசு  அங்கீகாரம் பெற்ற ஏஜன்சியை மட்டுமே நாட வேண்டும். ஆனால், பலர் போலி ஏஜன்சிகள், சப் ஏஜன்சிகள், தொடுப்பு ஏஜன்சிகளை நம்பி…… அதிக சர்வீஷ் சார்ஜ். போலியான வாக்குறுதிகள்.
சில போலி விசா பண மோசடிகளில் பாதிக்கப்படுகின்றனர்.…… எவ்வளவோ விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் பலனில்லை……

இதுகுறித்து, வெளிநாட்டுக்கு பணி நிமித்தமாக அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சி மூலம் சென்ற நண்பர் ஒருவர் அழகான விளக்கமுடன் கூறியதாவது,

உதாரணமாக பிரபல நிறுவனமான சாம்சங் மொபைல் போனை எடுத்துக்கொண்டால், அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் வாங்கினால், ஓரளவு நல்ல போன் ரூ.10ஆயிரத்துக்கு கிடைக்கும், ஆனால், அதுபோல சைனா தயாரிக்கும் டூப்ளிகேட் போன் ரூ.3ஆயிரத்துக்குக் கூட சாதாரண கடைகளிலும், பர்மா பஜார், சைனா பஜார் போன்ற இடங்களிலும் கிடைக்கும்

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் வாங்கினால், முத்திரைகள் சரிபார்த்து வாங்கலாம்.
கேரண்டி கார்டுடன் நம்பி வாங்கலாம். பின்னாளில் ரிப்பேர் என்றாலும், கேரண்டி காலக்கெடு விற்குள் சர்வீஷ் சென்டரில்  கொடுத்து இலவசமாக சரி செய்யலாம்.

ஆனால், டூப்ளிக்கேட் வாங்கினால் என்ன செய்வது, அதன் ஆயுட்காலம் எவ்வளவு என்பதும் நமக்கு தெரியாது, மக்கர் பண்ணினால் அவ்வளவுதான்… சுவாகா பண்ண வேண்டியதுதான்…பணம் வேஸ்ட்…

இதுபோலதான் அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிக்கும் போலி ஏஜன்சிக்கும் உள்ள வித்தியாசம்…

போலி ஏஜன்சிகளின் செயல்பாடுகள்……

1) ஏதோவொரு நட்பு பழக்கத்தின் மூலமோ, உறவினர் மூலமோ எப்படியோ ஒரு பத்து பேரை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, அந்த நற்பெயரை வைத்து 100 பேரை ஏமாற்றுவார்.

2) போலி போட்டோசாப் விசாக்களை கொடுத்து பணம் பறித்துவிட்டு பல மாதங்கள் அலைக்கழித்து பாதி பணம் கொடுப்பார். அல்லது, ஏதோவொரு ஹெல்ப்பர் வேலைக்கு, கம்மி சம்பளத்திற்கு அனுப்பி வைப்பர்.

3) விசிட் விசா கொடுத்து போலி வாக்குறுதிகளை கொடுத்து அனுப்பி வைப்பர். இந்த ஏஜன்ட்டுக் கும், வெளிநாட்டில் உள்ள ஒரு  ஏஜன்டுக்கும் இடையே தொடர்பு இருக்கும்… வெளிநாடு சென்றதும் அந்த ஏஜன்ட்  எதாவது கம்பெனிக்கு இன்டர்வியூவிற்கு அனுப்பி வைத்து
அலைக்கழிக்கும். இதில் அதிர்ஷ்டவசமாக  , சிலருக்கு வேலை கிடைக்கும், சிலருக்கு எங்காவது கொத்தடிமைகள் நிலையிலான வேலை கிடைக்கும்.…

4) சமூக வலை தளங்கள் மூலம்  கலர் கலரா விளம்பரங்கள் வரும். நம்பி CV அனுப்பினால் உடனே
தங்களுடைய CV செலக்ட் ஆகி விட்டது என கூறி தங்களது சித்துவேலைகளை காண்பிப்பர்…

5) போலியான ஆஃபர் லெட்டர். அல்லது போலியான வாக்குறுதிகளை கொடுத்து. அதிக சர்வீஷ் சார்ஜ் பெற்றுக் கொண்டு… விசா கொடுப்பர்.

அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிகள்……

1) சமூக வலைதளங்களில், பத்திரிகைகளில் விளம்பரம் வரும். அதில் RA licence no, address ஆகியன இருக்கும்.

2) நேரடி தேர்வு.  முதலில் ஆஃபர் லெட்டர். பின்பு மெடிக்கல்.  அதன்பின் விசா வித் டிக்கெட். அரசு குறிப்பிட்டுள்ள அளவிளான சர்வீஷ் சார்ஜ்.

3) பாதுகாப்பு: இதுதான் மிக முக்கியம். nஅரசு அங்கீகாரம் பெற்ற ஒரு ஏஜன்சி மூலம். ஆபர் லெட்டர் பெற்று வெளிநாடு செல்பவருக்கு… அந்த ஆ`பர் லெட்டர்படியான அனைத்தும் பெறுவதற்கான உத்ரவாதி அந்த ஏஜன்சிதான். அதில் எதாவது பிரச்சனை எனில் நாம் அந்த ஏஜன்சியை நாடலாம். புகாரளிக்கலாம். வழக்கு தொடுக்கலாம்………

எனவே, அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சியை நாடுங்கள்……
உங்கள் புரொபைல் என்னவோ அதற்கான சரியான வேலையை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்……

நல்ல கம்பெனியில். நல்ல சம்பளத்தில். நல்ல வேலை கிடைத்துவிட்டால்… கடுமையாக உண்மையாக உழைத்தால்…… வெளிநாடு உங்களுக்கு சொர்க்கம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக முயற்சிப்பவர்களுக்கு தேவையானவை……

நீங்கள் ஒரு ஏஜன்சியை நாடுகின்றீர்கள் எனில், முதலில் அது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்சியா என கண்டறிய…
https://emigrate.gov.in/ext/home.action என்ற வெப்சைட்டில் சென்று உறுதிப்படுத்த வேண்டும்.

முன்பனம் எக்காரணத்தை கொண்டும் முன்பணம் செலுத்தக்கூடாது.

விசா வருவதற்கு முன் முதன்முதலில் offer letter பெற வேண்டும்.

offer letter பரிசோதித்து கையெழுத்திட்டு அனுப்பிய பின்னரே விசா பெற வேண்டும்.

சில ஏஜன்சிகள் offer letter ல் உங்களுடைய கையெழுத்தை போலியாக இட்டு உங்கள் பெயரில் விசா வாங்கிவிட்டு போலியான வாக்குறுதிகளை கொடுத்து உங்களை ஏமாற்றுவர்.

offer letter & visa பரிசோதிக்க எளிய வழிகள்……

இந்திய தூதரக helpline
+911140503090
1800113090
+911126885021
+9144 29862069
+914428525610
helpline@mea.gov.in
helpline@owrc.in
poechennai1@mea.gov.in

இந்திய தூதரக தலைமையகம்
com.ottawa@mea.gov.in
q8embassy@gmail.com

தமிழக அரசின் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அமைச்சகம்… NRT
+914428515288
+914428520059
nrtchennai@gmail.com
nrtchennai@tn.gov.in
rehabsl.tn@nic.in
nrtsect@gmail.com

அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சிகள் எவையென கான
https://emigrate.gov.in/ext/home.action

ஆகியவற்றை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னரே  விசாவிற்கான ஏஜன்சி சர்வீஷ் சார்ஜ் கொடுக்க வேண்டும்……

வெளிநாடு சென்றபின் ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் மேலே உள்ள இந்த என்களை தொடர்புகொள்ளளாம்…

More articles

Latest article