இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தக வாக்குறுதிகள் மூலம் தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ள நிலையில் இதுதொடர்பாக மோடி மௌனம் காப்பது ஏன் ? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலை வர்த்தகம் மூலம் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தான் பார்க்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.
11 நாட்களில் எட்டாவது முறையாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கான முழுப் பெருமையையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, போர் நிறுத்தத்தை தானே தொடங்கி வைத்ததாக டிரம்ப் பலமுறை கூறி வந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் அத்தகைய கூற்றுக்களை மறுத்ததில்லை. இதில் ஏன் இந்த பயங்கரமான மௌனம்? என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களை சமமாகப் பாராட்டியுள்ளார். அவர்கள் எல்லா வகையிலும் சமம் என்பது போல் பேசியுள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகம்தான் இரு நாடுகளையும் போர்நிறுத்தத்தை அறிவிக்க அவர் பயன்படுத்திய ஆயுதம் என்று அவர் மீண்டும் கூறியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
“ஆயினும், டொனால்ட் டிரம்பின் நல்ல நண்பரான நமது பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியின் தொடர்ச்சியான அறிக்கைகள் குறித்து முற்றிலும் அமைதியாக இருக்கிறார்.”
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடுநிலையான இடத்தில் நடைபெறுவது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் அறிக்கை குறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் மௌனம் காப்பது குறித்தும் ஜெய்ராம் கேள்வி எழுப்பினார்.
“முதலில் இங்கிருந்து எழுந்து வெளியே போ” என்று செய்தியாளரிடம் எரிந்து விழுந்த டிரம்ப்