அமெரிக்கா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது NBC நிருபர், நீங்கள் கத்தாரில் இருந்து ஒரு போயிங் 747 சொகுசு விமானத்தை பரிசாகப் பெறுகிறீர்கள், இல்லையா? நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று அதிபர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், “நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்? தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளை விவசாயிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் இங்கே தீவிரமாகப் விவாதிக்கும்போது, ​​அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறீர்களா?” உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா? “நீங்க ஒரு பயங்கரமான நிருபர், உங்களுக்கு என்ன தெரியணும்னு தெரியல,” என்று அவர் உச்சஸ்தாயியில் கூச்சல் போட்டார்.

இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு சிறிது நேரம் தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உங்கள் NBC சேனலும் நன்றாக இல்லை” என்று கூறி டிரம்ப் அதோடு நிற்கவில்லை. அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். “போதும், எழுந்து இங்கிருந்து போ, நீ ரொம்ப கேவலமா இருக்க, இனிமே எந்த கேள்வியும் கேட்காதே” என்று கத்தினார்.

சமீபத்தில் டிரம்ப் கத்தாருக்கு விஜயம் செய்தபோது, ​​கத்தார் மன்னர் அமெரிக்காவிற்கு ஒரு போயிங் 747 சொகுசு விமானத்தை பரிசாக வழங்குவதாகக் கூறினார். அதன் பிறகு, அமெரிக்காவில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து அதிபர் டிரம்ப் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மறுபுறம், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல் வர்த்தகம் மூலம் தீர்க்கப்பட்டது என்று டிரம்ப் அதே பத்திரிகையாளர் சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதலை வர்த்தகம் மூலம் தீர்த்துவிட்டதாக தான் நினைப்பதாக டிரம்ப் ராமபோசாவிடம் கூறினார்.

அதன்பின் பேசிய டிரம்ப், “விமானம் எனக்கானது அல்ல, அது அமெரிக்கா ஒன் விமானப்படைக்கானது” என்றார். இனி இதுகுறித்து பேசி எந்தப் பயனும் இல்லை என்றார்.