டில்லி

டந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகளில் 54% அளவுக்கு முதலீடுகள்  4 தீவு நாடுகளிலிருந்து 54%  வந்துள்ளன.

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் ஒரு கணக்கெடுப்பை எடுத்துள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது.   இந்த முதலீடுகள் இந்தியாவைச் சர்வதேச வர்த்தகர்கள் தங்கள் முதலீட்டை வெளிநாடுகளில் இருந்து வரிச்சலுகைக்காக அளித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தியாவுடன் வர்த்தக ரீதியாக அதிக நட்புறவுடன் உள்ள நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.  கடந்த 20 ஆண்டுகளில் இவற்றில் இருந்து சுமார் 7% மற்றும் பிரிட்டனில் இருந்து 6% முதலீடுகள் வந்துள்ளன.  ஆனால் சிறு தீவு நாடுகளான மொரீசியஸ், சிங்கப்பூர்,  கேமன் தீவுகள் மற்றும் சிப்ரஸ் ஆகியவற்றில் இருந்து 54% முதலீடுகள் வந்துள்ளன.

இதில் சிங்கப்பூரில் இருந்து மட்டும் அதிக அளவில் இந்தியாவுக்கு முதலீடுகள் வந்துள்ளன.  இதற்கு முன்பு மொரீசியஸ் இல் இருந்து அதிக அளவில் முதலீடுகள் வந்துக் கொண்டிருந்தன.  கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சிங்கப்பூரில் இருந்து 830 கோடி டாலர்களும் மோரீசியஸ் இல் இருந்து 200 கோடி டாலர்களும் கேமன் தீவுகளில் இருந்து 210 கோடி டாலர்களும் முதலீடுகள் வந்துள்ளன.  இதில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் அதிக அளவு முதலீட்டை இந்தியா ஈர்த்துள்ளது.