சென்னை

ரு நாட்களுக்குத் தமிழகத்தில் இயல்பை விட வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது.

தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் பதிவாகி வருகிறது.  சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இரு நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது தமிழகத்தில் இரு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.