விஜய்யுடன் நடித்த அனுபவம் ; நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஐஎம்.விஜயன்….!

Must read

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ள முன்னாள் கால்பந்து வீரர் ஐஎம்.விஜயன் படத்தில் தன்னுடைய அனுபவங்களை கூறியுள்ளார் .

விஜய் தன்னை எப்போதும் ‘சார்’ என்று தான் மரியாதையுடன் அழைப்பார் என்றும், தன்னுடைய கால்பந்து போட்டிகளை யூடியூபில் அவர் பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளார் .

மேலும் கால்பந்து போட்டியில் உள்ள சில நுணுக்கங்கள் குறித்தும் , சிக்ஸர் கட் , பாஸ்ட் பேஸ் மூவ்மெண்ட் குறித்து விஜய் தன்னிடம் பேசியது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும்,கூறியுள்ளார் .

More articles

Latest article